ADDED : ஆக 23, 2025 02:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கர்நாடகாவில் நேத்ராவதி ஆற்றங்கரையில், 800 ஆண்டு பழமையான தர்மஸ்தலா மஞ்சுநாதா கோவில் உள்ளது. இந்த கோவிலின் புனிதத்தை கெடுக்க, கோவில் வளாகத்தில் ஏராளமான பெண்கள், கொன்று புதைக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது.
ஆனால், போலீசார் ஆய்வு செய்ததில், அது உண்மையல்ல என ஊர்ஜிதமானது. ஒரு கும்பல், இப்படி பேசுமாறு தன்னை கட்டாயப் படுத்தியதாக, புகாரை கிளப்பியவர் கூறியுள்ளார். இதன் பின்னணியில், தமிழக காங்., - எம்.பி., சசிகாந்த் செந்தில் இருப்பதாக, கர்நாடகா முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி குற்றஞ்சாட்டியுள்ளார். சசிகாந்த் செந்தில் மீதான குற்றச்சாட்டு குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும்; சதித்திட்டம் தீட்டிய கும்பலுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். - வானதி பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவி