தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/ உயருது துவரை, தொலிபருப்புகுண்டூர் வத்தல் விலை

உயருது துவரை, தொலிபருப்புகுண்டூர் வத்தல் விலை

உயருது துவரை, தொலிபருப்புகுண்டூர் வத்தல் விலை


ADDED : ஜூன் 08, 2025 12:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 08, 2025 12:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்:விருதுநகர் மார்க்கெட்டில் துவரம் பருப்பு புதுசு லயன் 100 கிலோவிற்கு ரூ. 300 உயர்ந்து ரூ. 10,500 முதல் ரூ. 10,800, குண்டூர் வத்தல் ரூ. 2 ஆயிரம் உயர்ந்து ரூ. 12,000 முதல் ரூ. 15,000, தொலிபருப்பு 100 கிலோவிற்கு ரூ. 600 உயர்ந்து ரூ. 9800 என விற்கப்படுகிறது.

இங்கு க.எண்ணெய் 15 கிலோ ரூ. 2500, ந.எண்ணெய் ரூ. 5775, பாமாயில் 15 கிலோவிற்கு ரூ. 70 குறைந்து ரூ. 1850, சர்க்கரை 50 கிலோ ரூ. 2210, மைதா 90 கிலோ ரூ. 4590, ரவை 30 கிலோவிற்கு ரூ. 20 உயர்ந்து ரூ. 1540, கொண்டைக்கடலை 100 கிலோ ரூ. 6500, பொரிகடலை 50 கிலோ ரூ. 4400 என விற்கப்படுகிறது.

உளுந்து நாடு 100 கிலோவிற்கு ரூ. 400 குறைந்து ரூ. 6900 முதல் ரூ. 7000, உருட்டு உளுந்தம் பருப்பு நாடு 100 கிலோவிற்கு ரூ. 200 உயர்ந்து ரூ. 10,000, உளுந்து லயன் 100 கிலோவிற்கு ரூ. 300 குறைந்து ரூ. 7900 முதல் ரூ. 8000, பாசிப்பருப்பு 100 கிலோவிற்கு ரூ. 100 குறைந்து ரூ. 9150 முதல் ரூ. 9250, பட்டாணி பருப்பு 100 கிலோவிற்கு ரூ. 100 குறைந்து ரூ. 4400, பாசிப்பயறு லயன் மீடியம் 100 கிலோவிற்கு ரூ. 100 குறைந்து ரூ. 6700 முதல் ரூ. 6900, என விற்பனை செய்யப்படுகிறது.

மல்லி நாடு ரூ. 3500 முதல் ரூ. 4300, மல்லி லயன் 40 கிலோ ரூ. 3450 முதல் ரூ. 3600, முண்டு வத்தல் 100 கிலோ ரூ. 8,000 முதல் ரூ. 14,000, கடலை புண்ணாக்கு 100 கிலோ ரூ. 4000, எள் புண்ணாக்கு 50 கிலோ ரூ. 1800 என விற்பனை செய்யப்படுகிறது. வத்தல் நாடு இந்த வாரம் வரத்து இல்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us