உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : பிப் 08, 2024 02:34 AM
அ நிறம் | அளவு
சென்னை:''முதல்வர் ஸ்டாலினின் ஸ்பெயின் பயணம் வாயிலாக தமிழகம் முழுதும் உயர்தர வேலைவாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது'' என தொழில் துறை அமைச்சர் ராஜா தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
ஸ்பெயின் பயணம் வாயிலாக 3440 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. பல ஆயிரக்கணக்கான உயர்தர வேலைவாய்ப்புகள் தமிழகம் முழுதும் வர வாய்ப்புள்ளது. முதல்வர் ஸ்டாலின் ஜப்பான் சென்று வந்ததும் ஜப்பான் நிறுவனம் தமிழகத்தில் பணியை துவங்கி விட்டது.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தங்களில் பல திட்டங்கள் இம்மாதமே துவங்க உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
