தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ஹிந்து முன்னணி வேதனை

ஹிந்து முன்னணி வேதனை

ஹிந்து முன்னணி வேதனை


ADDED : அக் 04, 2024 12:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 04, 2024 12:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் ஆன்மிகத்தோடு, மண் வளம் பாதுகாத்தல், மரங்களை நடுதல், பாரம்பரிய கலைகளை ஊக்குவித்தல் மற்றும் கிராம புத்துணர்வு இயக்கம் என்ற பெயரில் மருத்துவச் சேவைகள் என, பல தன்னார்வ பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இங்கிருந்து மட்டுமின்றி, பல வெளிநாடுகளில் இருந்தும், தியானம் மற்றும் யோகா கற்பதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மையத்துக்கு வந்து செல்கின்றனர். மையத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், தனிநபர் விமர்சனங்களும், சில தனியார் அமைப்புகளின் எதிர்ப்புகளும் தொடர்ந்து வருகின்றன.

துறவறம் மேற்கொள்ளுதல் மற்றும் வழிபாட்டு உரிமையை பாதுகாக்க வேண்டிய நீதிபதிகள், தனிநபர் காழ்ப்புணர்ச்சியோடு ஈஷா மையம் மீது தொடர்ந்த வழக்கில், ஈஷா நிறுவனர் சத்குரு மகளின் திருமணத்தை குறிப்பிட்டு பேசியது, தனிநபர் தாக்குதலாகவே அமைகிறது.

இத்தகைய போக்கு நீதி, பரிபாலனம் மீதே மக்கள் சந்தேகப்படும் நிலையை ஏற்படுத்தி விடும். நீதிபதிகள், தனிநபர் உணர்வுகளை புண்படுத்தாமலும், தனிநபர் உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் தங்கள் கருத்தை வெளிப்படுத்த வேண்டும்.

- காடேஸ்வரா சுப்ரமணியம்

ஹிந்து முன்னணி தலைவர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us