UPDATED : ஜூலை 23, 2025 01:45 PM
ADDED : ஜூலை 23, 2025 05:59 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் ஹிந்து முன்னணி நிர்வாகி பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி, எல்லைப்பிள்ளைசாவடி, சித்தானந்தா நகரை சேர்ந்தவர் துரை, 48; ஹிந்து முன்னணி நகர செயற்குழு உறுப்பினர். மணல், ஜல்லி வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு மனைவி, இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
வீட்டில் நடைபெற்று வரும் கட்டுமான பணிக்காக நேற்று மதியம் தன் விற்பனை நிலையத்தில் மினி லாரியில் மணலை ஏற்றிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், துரையை சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பினர்.
ரெட்டியார்பாளையம் போலீசார் துரை உடலை மீட்டனர். முதற்கட்ட விசாரணையில், சொத்து தகராறில், துரை மனைவி ரேகா வழி உறவினர்களால் கொலை நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.