ADDED : ஜூலை 21, 2025 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம், புதிய இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கக்கூடாது, என்று கூறுவது, ஹிந்துக்களை அவமானப்படுத்துவதாகும்.
விநாயகர் சதுர்த்தியன்று, வீடு தோறும்; வீதி தோறும் விநாயகர் சிலைகளை வைத்து கொண்டாட வேண்டும்.
அடுத்த ஆண்டு மாசி மகம் விழாவின் போது, இந்தியாவில் உள்ள அனைத்து துறவியர் மற்றும் எங்கள் கட்சியின் தேசியத் தலைவர் சக்கரபாணி மகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்கும் மாநாடு நடைபெற உள்ளது.
சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளிலும், தனித்து போட்டியிடுவோம். பா.ஜ., போட்டியிட்டாலும் எதிர்த்து போட்டியிடுவோம்.
- பாலசுப்பிரமணியன்,
அகில பாரத ஹிந்து மகா சபா மாநில தலைவர்