'முட்டாள்களை தேர்வு செய்யாதீர்' ஹிந்து தமிழர் கட்சி வேண்டுகோள்
'முட்டாள்களை தேர்வு செய்யாதீர்' ஹிந்து தமிழர் கட்சி வேண்டுகோள்
ADDED : ஆக 03, 2025 02:52 AM
ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் அறிக்கை:
தேனி, ஆண்டிப்பட்டியில் நீதிமன்ற உத்தரவை மீறி நடந்த, 'நலன் காக்கும் ஸ்டாலின்' விழாவில், தி.மு.க., - - எம்.பி., தங்கதமிழ்ச்செல்வன், தி.மு.க., -- எம்.எல்.ஏ., மகாராஜன் இருவரும், ஒருவருக்கொருவர் முட்டாள் என திட்டிக் கொண்டனர். கோபமடைந்த எம்.எல்.ஏ., 'ராஸ்கல், பொறுக்கி தொலைச்சிப்புடுவேன்' என, அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியத்தை, மக்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.
முட்டாளையும், ராஸ்கலையும் தேர்ந்தெடுத்தால் என்ன நடக்கும் என்பதற்கு, ஆண்டிப்பட்டி சம்பவமே சாட்சி. 'உங்களுடன் ஸ்டாலின்' என்று முதல்வர் சொல்கிறார். அவருடன் முட்டாள், ராஸ்கல் என, எம்.பி.,யும்., எம்.எல்.ஏ.,வும் இருக்கின்றனர். இனி வரும் தேர்தல்களிலாவது, முட்டாள்களை தமிழக மக்கள் தேர்வு செய்யாதீர்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

