தென்காசி கோவிலில் தீ வைப்பு ஹிந்து தமிழர் கட்சி கண்டனம்
தென்காசி கோவிலில் தீ வைப்பு ஹிந்து தமிழர் கட்சி கண்டனம்
ADDED : ஜன 04, 2025 08:10 PM
சென்னை:தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில் முன் தீ வைக்கப்பட்டதற்கு, ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில் திருப்பணிக்காக மரத்தால் சாரம் கட்டி, வேலை செய்து பிரித்து முடித்தவுடன் தீ வைக்கப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட நபர், அவரது பின்னணி குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும்.
கோவில் முன் கண்காணிப்புக்கு காவல் அறை இருந்தும், இந்த சம்பவம் எப்படி நடந்தது; செருப்புகளை எல்லாம் எடுத்து தீ வைக்கும் நபரை மனநோயாளி என்று எப்படி கூற முடியும் என்பது போன்ற, பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இந்த தீ வைப்பு சம்பவம், அனைத்து ஹிந்து கோவில்களுக்கும் விடப்பட்ட எச்சரிக்கை. சபரிமலை மற்றும் பழநிக்கு செல்லும் பக்தர்கள், ஆயிரக்கணக்கில் தென்காசிக்கு வரும் நிலையில்,  தீ வைப்பு சம்பவம் நடந்திருப்பது, பக்தர்களிடையே  அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

