தைப்பூசத்தன்று பத்திரப்பதிவு அலுவலகங்களை திறக்க கூடாது * ஹிந்து தமிழர் கட்சி கோரிக்கை
தைப்பூசத்தன்று பத்திரப்பதிவு அலுவலகங்களை திறக்க கூடாது * ஹிந்து தமிழர் கட்சி கோரிக்கை
ADDED : பிப் 08, 2025 09:20 PM
சென்னை:'தைப்பூசத்தன்று பத்திரப்பதிவு அலுவலகங்களை திறக்கக்கூடாது' என, ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழ் கடவுள் முருகனுக்காக கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசம். இலங்கை, சிங்கப்பூர், மலேஷியா, மொரிசியஸ், இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் தைப்பூசம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
அ.தி.மு.க., ஆட்சியில், தைப்பூசத்திற்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. வரும், 11ம் தேதி செவ்வாய் கிழமை தைப்பூசத்தன்று, பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, ரம்ஜான் என, பிற மத பண்டிகைக்கான விடுமுறை தினங்களிலும் பத்திர பதிவுத்துறை அலுவலகம் செயல்படுமா?
முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தியதாக பெருமை கொள்ளும் தமிழக அரசே, முருகப்பெருமானை போற்றிக் கொண்டாடும் தைப்பூச தினத்தில், பத்திரப்பதிவு அலுவலகத்தை மட்டும் திறப்பது இரட்டை நிலைப்பாடு.
எனவே, இதில் முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு, தைப்பூசத்தன்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படாது என்று அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு ராம ரவிக்குமார் கூறியுள்ளார்.