இஸ்லாமியர்களுக்கு இனிப்பு வழங்கி பக்ரீத் வாழ்த்து தெரிவித்த ஹிந்துக்கள்
இஸ்லாமியர்களுக்கு இனிப்பு வழங்கி பக்ரீத் வாழ்த்து தெரிவித்த ஹிந்துக்கள்
ADDED : ஜூன் 17, 2024 05:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூரில், பக்ரீத் கொண்டாடிய இஸ்லாமியர்களுக்கு, விநாயகர் கோயில் நிர்வாகம் சார்பில் இனிப்பு வழங்கப்பட்டது.
திருப்பூர், முதலிபாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில், செல்வ விநாயகர் கோயில் உள்ளது. சமீபத்தில் நடந்த இக்கோயில் கும்பாபிஷேகத்தின்போது, அப்பகுதி இஸ்லாமியர்கள் சீர் வரிசை கொண்டு சென்று வழங்கினர்.
இன்று பக்ரீத் பண்டிகையையொட்டி, பெரிய பள்ளி வாசலில் தொழுகையை முடித்து வந்த இஸ்லாமியர்களுக்கு செல்வ விநாயகர் கோயில் நிர்வாகிகள், ரோஜா பூ வழங்கியும், இனிப்பு வழங்கியும் பக்ரீத் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இப்பகுதியில் ஹிந்துக்களும், இஸ்லாமியர்களும் மத வேறுபாடு இன்றி சகோதரத்துவத்துடன் வசிப்பதற்கு எடுத்துக் காட்டாக இந்த செயல் இருந்தது.