ADDED : செப் 05, 2025 03:42 AM

ராஜ்கிர்: பீஹாரின் ராஜ்கிரில் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் 12வது சீசன் நடக்கிறது.
நேற்று நடந்த 'சூப்பர்-4' சுற்று போட்டியில் இந்தியா, மலேசியா மோதின. மலேசியாவின் ஷபிக் ஹசன் (2வது நிமிடம்), ஒரு கோல் அடித்தார். இந்தியாவுக்கு 'பெனால்டி கார்னர்' வாய்ப்பு கிடைத்தது.
இதை கோலாக மாற்றினார் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் (17). பின் சுக்ஜீத் சிங் (19), ஷிலானந்த் லக்ரா (24), விவேக் சாகர் பிரசாத் (38) தலா ஒரு கோல் அடிக்க, இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
சீனாவுக்கு 'ஷாக்' நேற்று நடந்த மற்றொரு 'சூப்பர்-4' போட்டியில் சீன அணி, 'நடப்பு சாம்பியன்' தென் கொரியாவை 3-0 என வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது. 'சூப்பர்-4' சுற்று புள்ளிப்பட்டியலில் இந்தியா (4 புள்ளி) முதலிடத்துக்கு முன்னேறி, பைனல் வாய்ப்பை அதிகரித்துக் கொண்டது. சீனா (3), மலேசியா (3), தென் கொரியா (1) அணிகள் அடுத்த 3 இடத்தில் உள்ளன.