ADDED : நவ 06, 2025 02:32 AM

சென்னை: மதுரை, சென்னையில் ஜூனியர் ஆண்கள் ஹாக்கி உலகக்கோப்பை போட்டியை நடத்த, தமிழக அரசு 44 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.
14வது ஜூனியர் ஆண்கள் ஹாக்கி உலகக்கோப்பை போட்டி, வரும் 28ம் தேதி முதல், டிச., 10ம் தேதி வரை சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானம், மதுரை எஸ்.டி.ஏ.டி ஹாக்கி மைதானம் ஆகியவற்றில் நடக்க உள்ளன.
தமிழகத்தில், முதன் முறையாக நடக்கும் இந்த உலகக்கோப்பை போட்டியில், 24 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்க உள்ளன. தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்தும் இப்போட்டிக்கு, தமிழக அரசு 44 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது. இப்போட்டிக்கான கோப்பையை, தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிமுகப்படுத்தினார்.
அப்போது, துணை முதல்வர் உதயநிதி, ஹாக்கி இந்தியா தலைவர் திலீப் திர்கி, செயலர் போலாநாத் சிங், தலைமைச் செயலர் முருகானந்தம், விளையாட்டுத் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

