ADDED : மார் 21, 2024 12:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:லோக்சபா தேர்தலை முன்னிட்டு, மதுக் கடைகளில், மொத்தமாக மதுபானங்களை விற்கக் கூடாது என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, டாஸ்மாக் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் மதுக்கூடங்களில், முறைகேடாக நடக்கும் மது விற்பனையை, மாவட்ட மேலாளர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக புகார்கள்எழுகின்றன.
இந்நிலையில், 'மதுக் கடைகள், மதுக்கூடங்களில் தவறுகள் கண்டறியப்பட்டால், அதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட மேலாளர்களே பொறுப்பாவர்; அவர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்' என, டாஸ்மாக் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

