தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ வெறிநாய்களை பிடியுங்கள்

வெறிநாய்களை பிடியுங்கள்

வெறிநாய்களை பிடியுங்கள்


ADDED : பிப் 18, 2025 07:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2025 07:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் இன்னொரு அறிக்கை:

திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு உட்பட்ட காங்கேயம் சட்டசபை தொகுதியில் வெறிநாய் தாக்குதலால், நுாற்றுக்கணக்கான ஆடுகள் பலியாகி உள்ளன. இதனால், ஆடு வளர்க்கும் விவசாயிகளுக்கு, பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட விவசாயிகள், ஈரோடு - பழனி நெடுஞ்சாலையில், பாரவலசு என்ற இடத்தில், கடந்த வாரம் தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை போலீசார் கைது செய்து, வலுக்கட்டாயமாக அகற்றி உள்ளனர். கடந்த 16ம் தேதி, ஈரோடு மாவட்டம், குட்டக்காட்டைச் சேர்ந்த விவசாயிகளின் 25 ஆடுகள், வெறிநாய் தாக்குதலுக்கு பலியாகி உள்ளன.

வெறிநாய் தாக்குதலால், கால்நடைகள் மட்டுமின்றி, சிறு குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, தமிழகம் முழுதும், சாலைகளில் திரியும் வெறிநாய்களை பிடிக்க, தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெறிநாய்களால் ஆடுகளை இழந்துள்ள விவசாயிகளுக்கு, உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us