6 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை; கோவை பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை
6 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை; கோவை பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை
UPDATED : அக் 15, 2024 06:57 AM
ADDED : அக் 15, 2024 06:39 AM

சென்னை: கனமழை எச்சரிக்கையை அடுத்து, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில், இன்று(அக்.,15) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று அரை நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலை.,க்கு விடுமுறை
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதைஅடுத்து, சென்னை பல்கலை.,க்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை பல்கலை.,யின் கீழ் உள்ள கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்ய, நவ.,9 ம் தேதி, கல்லூரிகள் செயல்படும் எனவும் அறிவித்துள்ளது.
அண்ணாமலை பல்கலை., வகுப்புகள் ரத்து:
சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.,யில், இன்று வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. பல்கலை.,யின் கீழ் உள்ள கல்லூரிகளில், இன்று நடைபெறவிருந்த தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.