நேர்மையான அதிகாரிகள் தி.மு.க., அரசில் பணியாற்ற முடியாது
நேர்மையான அதிகாரிகள் தி.மு.க., அரசில் பணியாற்ற முடியாது
ADDED : ஜூலை 19, 2025 03:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலாடுதுறை மது விலக்கு டி.எஸ்.பி., சுந்தரேசன், அனுமதியின்றி செயல்பட்ட, 23 மதுக்கூடங்களை மூடியதுடன், சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட, 1,200 பேர் மீது வழக்கு தொடர்ந்து, 700 பேரை சிறைக்கு அனுப்பியுள்ளார். அவரது நேர்மையான நடவடிக்கைகள் பிடிக்காமல், அவமானப்படுத்தும் நோக்கத்தோடு, அவரது வாகனத்தை, எந்த காரணமும் கூறாமல், தி.மு.க., அரசு, திரும்பப் பெற்றிருக்கிறது.
ஏற்கனவே, கடந்த ஆண்டு, தி.மு.க., அரசின் காவல் துறை தவறுகள் குறித்து, மனித உரிமைகள் ஆணையத்தில் அறிக்கை கொடுத்ததற்கு பழிவாங்கவே, மயிலாடுதுறைக்கு அவரை பணிமாற்றம் செய்தனர். தற்போது, மீண்டும் அவரை அலைக்கழிப்பது, நேர்மையான அதிகாரிகள், தி.மு.க., அரசில் பணியாற்ற முடியாது என்பதையே காட்டுகிறது.
-அண்ணாமலை,
முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,