எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., பாடப்பிரிவுகளில் கவுரவ விரிவுரையாளர்கள்
எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., பாடப்பிரிவுகளில் கவுரவ விரிவுரையாளர்கள்
ADDED : அக் 03, 2025 10:07 PM
சென்னை:தமிழகத்தில், 180 அரசு கலை அறிவியல் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன.
இதில், சேலம் அரசு கலை கல்லுாரி, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லுாரி, சாத்தான்குளம், தொண்டாமுத்துார் மற்றும் சென்னை ஆர்.கே.நகர் ஆகிய, ஐந்து அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில், 2023 - 24ம் கல்வியாண்டு முதல், எம்.பி.ஏ., பட்டப்படிப்பு கற்பிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல, திருப்பத்துார், திருச்சி, ஊட்டி, சென்னை ராணிமேரி, வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில், எம்.சி.ஏ., பட்டப்படிப்புகள் துவக்கப்பட்டுள்ளன. இதற்கு பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக, 881 கவுரவ விரிவுரையாளர்களை தேர்வு செய்யும் பணியில், கல்லுாரி கல்வி இயக்ககம் ஈடுபட்டுள்ளது. தற்போது, விண்ணப்பப் பதிவு நடந்து வருகிறது.
இதில், தேர்வு செய்யப்படும் கவுரவ விரிவுரையாளர்களை, 10 அரசு கல்லுாரிகளில் துவக்கப்பட்ட எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., பாடப்பிரிவுகளுக்கு பணியமர்த்த, உயர் கல்வி துறை திட்டமிட்டுள்ளது.