ADDED : ஜன 06, 2026 12:47 AM

- - நமது நிருபர் -:
பணி மாறுதலில் சலுகை காட்டுவதாக அதிகாரிகள் தெரிவித்ததால், சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடத்திய தோட்டக்கலை துறையினர் சமாதானமடைந்து பணிக்கு திரும்பினர்.
தமிழக வேளாண் துறையில், 'உழவர் தொடர்பு திட்டம் 2.0' என்ற புதிய திட்டத்தை அரசு அறிவித்தது. அதில், ஒரு கிராமத்தில் ஒரு உதவி வேளாண் அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர் இருப்பதை ரத்து செய்து, இரு அலுவலர்களில் யாராவது ஒருவர் மட்டும் இருக்க அரசு ஆணை பிறப்பித்தது.
இதற்கு தோட்டக்கலை அனைத்து பணியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து பேராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இவர்களிடம் அரசு பேச்சு நடத்தியது.
இதில், அரசாணையில் மாற்றம் செய்ய முடியாது; ஆனால், பணியிட மாறுதலில் சலுகை காட்டப்படும் என தெரிவித்தனர். இதனை ஏற்று தோட்டக் கலைத் துறையினர் பணிக்கு திரும்பினர்.
தோட்டக்கலை உதவி அலுவலர் ஒருவர் கூறுகையில், 'பேச்சு நடத்தியதில், மாவட்டத்திற்குள் பணியிட மாற்றம், கிராமங்களில் வேளாண் பயிர் அதிக சாகுபடி என்றால் உதவி வேளாண் அலுவலரை நியமிப்பது, தோட்டக்கலை பயிர் அதிகம் என்றால் உதவி தோட்டக்கலை அலுவலரை நியமனம் செய்வது போன்ற கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டது. இதனால், போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினோம்' என்றார்.
