sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ தொழில்நுட்ப பிரச்னையை தீர்க்க விடுதி காப்பாளர்கள் கோரிக்கை

 தொழில்நுட்ப பிரச்னையை தீர்க்க விடுதி காப்பாளர்கள் கோரிக்கை

 தொழில்நுட்ப பிரச்னையை தீர்க்க விடுதி காப்பாளர்கள் கோரிக்கை


ADDED : மார் 22, 2026 03:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 22, 2026 03:34 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை: 'விடுதிகளில் 'பயோ மெட்ரிக்' தொழில்நுட்ப பிரச்னையை சரி செய்வது உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை, தேர்தலுக்கு முன் நிறைவேற்ற வேண்டும்' என, ஆதிதிராவிடர் நல விடுதி காப்பாளர்கள் மற்றும் சமையலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து, அவர்கள் துறை ஆணையரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

ஆதிதிராவிடர் நலத்துறை கீழ் செயல்படும், 1,331 சமூக நீதி விடுதிகளில், 900க்கும் மேற்பட்ட விடுதிகளில், 'பயோ மெட்ரிக்' முறையில், மாணவர்களுக்கு உணவு வினியோகம் செய்யும் நடைமுறை உள்ளது.

ஆனால், இக்கருவியில் ஏற்பட்டுள்ள, தொழில்நுட்ப கோளாறு, சிக்னல் பிரச்னையால், மாணவர்கள் பலரால், இதில் பதிவு செய்ய முடியவில்லை.

இதனால், அரசு மாணவர்களுக்கான உணவு நிதியை குறைத்து வழங்குகிறது. எனவே, இப்பிரச்னையை அதிகாரிகள் விரைந்து சரி செய்ய வேண்டும்.

அதேபோல், காப்பாளர்கள் மன நலனை பேணும் வகையில், நிர்வாகக் குழு அமைப்பது, கடந்த நிதியாண்டில் செலவு செய்த தொகையை, அரசு திருப்பி வழங்குவது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை, தேர்தலுக்கு முன் நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us