sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கிடப்பில் ஓசூர் - ஜோலார்பேட்டை ரயில் பாதை திட்டம்; அமைச்சர் உறுதி அளித்தும் அறிவிப்பு வரவில்லை

/

கிடப்பில் ஓசூர் - ஜோலார்பேட்டை ரயில் பாதை திட்டம்; அமைச்சர் உறுதி அளித்தும் அறிவிப்பு வரவில்லை

கிடப்பில் ஓசூர் - ஜோலார்பேட்டை ரயில் பாதை திட்டம்; அமைச்சர் உறுதி அளித்தும் அறிவிப்பு வரவில்லை

கிடப்பில் ஓசூர் - ஜோலார்பேட்டை ரயில் பாதை திட்டம்; அமைச்சர் உறுதி அளித்தும் அறிவிப்பு வரவில்லை

1


ADDED : ஜன 16, 2025 04:47 AM

Google News

ADDED : ஜன 16, 2025 04:47 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்; ஓசூர் - ஜோலார்பேட்டை திட்டம் கிடப்பில் உள்ள நிலையில், ஓசூரில் இருந்து மாலுார் அல்லது ஓசூர், வேப்பனஹள்ளி வழியாக குப்பத்திற்கு ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்திலேயே ரயில் சேவை இல்லாத ஒரே மாவட்ட தலைநகராக கிருஷ்ணகிரி மட்டுமே உள்ளது.

ஓசூரில் ரயில் சேவை இருந்த போதும், சென்னைக்கு செல்ல வேண்டுமானால், சேலம் அல்லது பெங்களூரு அல்லது மொரப்பூர் சென்று தான், அங்கிருந்து ரயிலில் செல்ல முடியும்.

கோரிக்கை


இது, கால விரயத்தை ஏற்படுத்தி வருவதுடன், தொழில் முனைவோர் தங்களது உறுபத்தி பொருட்களை அனுப்ப லாரிகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டியுள்ளது.

எனவே, ஜோலார்பேட்டையில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக ஓசூர் வரை, ரயில் வழித்தடத்தை ஏற்படுத்த வேண்டும் என, பல ஆண்டுகளாக தொழில் முனைவோர், சிறு, குறு தொழிற்சாலை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மொத்தம், 11 முறை சர்வே செய்யப்பட்டு, இத்திட்டத்தை செயல்படுத்த முடியாது என, மத்திய அரசும் கைவிரித்து விட்டது.

கடைசியாக ரயில்வே நிர்வாகம் இத்திட்டத்திற்கான திட்ட மதிப்பீடு அறிக்கை தயார் செய்ய, கதி சக்தி திட்டத்தில், 2.47 கோடி ரூபாயை ஒதுக்கியது.

பெங்களூரைச் சேர்ந்த நிறுவனம் சர்வே வரைபடங்களுடன் திட்டத்திற்கான இறுதி மதிப்பீட்டு பணிகளை மேற்கொண்டது.

இறுதியில், ஓசூர் - ஜோலார்பேட்டை திட்டத்தை செயல்படுத்த, 2,200 கோடி ரூபாய் வரை செலவாகும் என திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு மத்திய அரசிற்கு வழங்கப்பட்டது.

கடந்த 2023ல் ஓசூர் வந்த அப்போதைய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், '15 நாட்களுக்கு ஒருமுறை இத்திட்டம் குறித்து கண்காணிக்க போகிறேன். இத்திட்டத்தில் செலவு குறைக்கப்பட்டு, திட்ட மதிப்பீடு தயார் செய்யப்படும். கண்டிப்பாக இத்திட்டம் வரும்' என, கூறினார்.

செலவு அதிகம்


ஆனால், இதுவரை ஓசூர் - ஜோலார்பேட்டை திட்டம் அறிவிக்கப்படவில்லை. ஓசூர் - கிருஷ்ணகிரி, ஜோலார்பேட்டை திட்டத்தில் நீண்ட துாரம் சுரங்கம் வருவதால், அதன் செலவு அதிகமாக இருக்கிறது.

அதை குறைக்க மத்திய அரசு தீர்வு கண்டு வருகிறது. இத்திட்டத்திற்கான செலவை குறைக்க முடியுமா என, மத்திய அரசு ஆலோசிக்கிறது. இதனால், ஓசூர் - ஜோலார்பேட்டை திட்டம் கிடப்பில் உள்ளது.

இந்நிலையில், ஓசூரில் இருந்து கர்நாடகா மாநிலம் மாலுாருக்கு அல்லது ஓசூரில் இருந்து வேப்பனஹள்ளி வழியாக குப்பத்திற்கு ரயில்பாதை அமைக்க வேண்டும் என, தொழில் முனைவோர், சிறு குறு தொழிற்சாலை உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதில், ஏதாவது ஒரு ரயில்பாதை திட்டத்தை கொண்டு வந்தால் கூட, மக்கள் ஜோலார்பேட்டைக்கு சென்று அங்கிருந்து நாட்டின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் செல்ல முடியும்.

இந்த கருத்தை வலியுறுத்தி, கிருஷ்ணகிரி காங்., - எம்.பி., கோபிநாத், மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

ஆனால், இத்திட்டம் குறித்து மத்திய அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. ஓசூர் - ஜோலார்பேட்டை திட்டம் வர வேண்டும் என்பது தான், கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக உள்ளது.

அத்திட்டம் மட்டுமின்றி, ஓசூர் - மாலுார் திட்டத்தையும் மத்திய அரசு சேர்த்து நிறைவேற்றினால், வரும் காலத்தில் ஓசூர் நகரின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.






      Dinamalar
      Follow us