தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/அந்துமணி பதில்கள் – 05.10.2026

அந்துமணி பதில்கள் – 05.10.2026

அந்துமணி பதில்கள் – 05.10.2026


UPDATED : அக் 05, 2026 12:00 AM

ADDED : அக் 04, 2026 08:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 12:00 AM ADDED : அக் 04, 2026 08:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜெ.ஜெனிபர், நாகப்பட்டினம்:

‘த.வெ.க., என்பது அரசியல் கட்சியே அல்ல. அது, ‘கார்ப்பரேட்’ மாபியா, அதில், ‘இன்வெஸ்டிங், ஸ்லீப்பங், சீக்ரெட் பார்ட்னர்ஸ்’ என, பல கும்பல்கள் உள்ளன’ என, ஸ்டாலின் ஆவேசமாக கூறுகிறாரே?

தனக்கு தெரிந்த ஆங்கில வார்த்தைகள் பலதையும் அள்ளி விடுகிறார் ஸ்டாலின். ஒரு வேளை, இவர் கட்சியினருக்கு இப்படி, பிரித்து பிரித்து பொறுப்பு கொடுத்து பழக்கம் ஏற்பட்டிருக்குமோ... இதோடு கூட, அ.தி.மு.க., பழனிசாமி கமிஷன், கலெக் ஷன், கரப் ஷன் என, தி.மு.க., ஆட்சிக்கு எதிராக சொன்னதும் நினைவுக்கு வருகிறது!

மா.மீனாட்சி சுந்தரம், மன்னார்குடி:

‘ரத்த தானம் செய்ய முன் வர வேண்டும்’ என, தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளதே?

நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் அனைவரும், ஆண்டுக்கு மூன்று அல்லது நான்கு முறை ரத்த தானம் செய்யலாம். நீங்கள் ஒவ்வொரு முறை ரத்தம் கொடுக்கும்போதும், மூன்று பேரின் உயிர் காக்கப்படுகிறது.

அ.ஜானகிராம், கடையநல்லுார்:

தாராபுரத்தில் பேசிய ஸ்டாலின் த.வெ.க., பெண் வேட்பாளரை உருவ கேலி செய்து பேசியுள்ளாரே? இது சரியா அந்துமணி... அவர் தானே சில நாட்களுக்கு முன், ‘அறத்துடன் பேச வேண்டும், சுரத்துடன் பேச வேண்டும்’ என, கூறினார்?

உதயநிதி ஸ்டாலினுக்கு செல்ல வேண்டிய, ‘ஸ்கிரிப்ட்’ தவறாக ஸ்டாலினுக்கு போய் விட்டது போலும். அதனால் இந்த ‘பல்டி!’

வ.தேன்மொழி, மானாமதுரை:

‘திராவிட கட்சிகளான, தி.மு.க., – அ.தி.மு.க.,வை ஒழிக்க, 15 ஆண்டுகள் போராடினேன். தற்போது த.வெ.க.,வை ஒழிக்க மேலும் போராடும் நிலை வந்துள்ளது’ என்கிறாரே, நாம் தமிழர் கட்சி சீமான்?

ஆக மொத்தம், நல்லாட்சி கொடுக்கும் நோக்கில், சீமான் அரசியலுக்கு வரவில்லை; மற்ற கட்சிகளை ஒழிப்பது தான் அவர் நோக்கம்!

டி.ஜெயசிங், கோவை:

மற்றொரு மொழியை கற்க தடை போடும் திராவிட கட்சிகள், தமிழர்களை குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட செய்து விட்டனரே?

உங்களுக்கு புரிகிறது ஜெயசிங்... அரசியல்வாதிகளுக்கு புரிந்தும், புரியாத மாதிரி நடித்து, அதை வைத்து அரசியல் செய்கின்றனரே!

வ.முருகன், விழுப்புரம்:

‘உள்ளாட்சி, சட்டசபை தேர்தல்களில் அதிகளவில் பெண்களை போட்டியிட வைக்க வேண்டும், பிரசாரம் செய்யாமலேயே தேர்தல் களத்தில் நிற்க வேண்டும்’ என, ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை புதுமையான கருத்தை தெரிவித்துள்ளாரே?

அதிகளவில் பெண்கள் போட்டியிட வேண்டும் என்பது சரி, ஆனால், பிரசாரம் செய்யாமலேயே நிற்க வேண்டும் என்பது, போகாத ஊருக்கு வழி!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us