தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை ஏற்போம்: சபாநாயகர் பிரபாகர்

எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை ஏற்போம்: சபாநாயகர் பிரபாகர்

எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை ஏற்போம்: சபாநாயகர் பிரபாகர்

2


ADDED : அக் 04, 2026 08:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 04, 2026 08:49 PM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: ''அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதில் நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கினாலும் அதற்கு சட்டசபை தலை வணங்கும்'' என சபாநாயகர் பிரபாகர் தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: தேர்தல் வரலாற்றில் ஆளுங்கட்சிக்கு ஓட்டளிப்பதன் மூலம் தொகுதி நன்மை பெறும் எனும் எண்ணத்தின் அடிப்படையில் இதுவரை வெற்றி கிடைத்திருக்கின்றன. சட்டசபையில் வினாக்களுக்கு விடை அளிக்க ஒரு மணி நேரம் ஒதுக்கப்படுகிறது. இம்முறை நிறைய எம்.எல்.ஏ.,க்களை பேச வைக்க விரும்பினேன்.

பல்லாண்டு அமைச்சர்கள், கேள்விகளுக்கு உடனடியாக பதிலை பெற்று கூறினர். மீதி உள்ளவை 'பதிவு' எனும் முறையில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. புதிய அணுகுமுறையால் சில கேள்விகளுக்கு உடனடியாக பதில் பெற முடியவில்லை. பதிலை அந்தந்த அமைச்சர்கள், அனுப்பும் நிகழ்வு தொடர்ந்து நடக்கிறது. அனைவரின் கேள்விகளுக்கும் பதிலளிக்கப்படுகிறது. மிகச் சிறந்த ஜனநாயக முறையில் முதல் கூட்டத்தொடர் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது.

என் மீது குறைகள் இருந்து அதை குறிப்பிட்டு சொன்னால் திருத்திக் கொள்வேன். எந்தத் துண்டுக்கும், சீட்டுக்கும் கட்டுப்படுபவன் நான் அல்ல. விதிக்கு மட்டும்தான் கட்டுப்படுவேன். சட்டசபையில் 'மிசா' வழக்கு பற்றி முதல்வர் விஜய் நிறைய பேசினார். சட்டசபையில் யார் யார், எந்தெந்த ஆண்டுகளில் 'மிசா'வை பற்றி பேசினார்கள்.

'மிசா'வில் எப்படி, எதற்காக கைது செய்யப்பட்டார்கள் என்ற விவாதங்கள், எவ்வளவு மணி நேரம் நடந்திருக்கிறது எனும் குறிப்பு எனக்கு வந்தது. மற்றபடி சபையில் யார் பேச வேண்டும், பேசக்கூடாது என உத்தரவை யாரும் எனக்கு பிறப்பிக்கவில்லை, பிறப்பிக்கவும் மாட்டார்கள். அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கு மேல்முறையீட்டில் நீதிமன்ற தீர்ப்புக்கு தலைவணங்குவோம். சட்டசபை விதி, அதிகார வரம்பிற்கு உட்பட்டு அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us