தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/அந்துமணி பதில்கள் – 14.10.2026

அந்துமணி பதில்கள் – 14.10.2026

அந்துமணி பதில்கள் – 14.10.2026


UPDATED : அக் 14, 2026 12:00 AM

ADDED : அக் 13, 2026 10:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 12:00 AM ADDED : அக் 13, 2026 10:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜி.கோகுல கிருஷ்ணன், திருவாரூர்:

‘அரசு ஊழியர்கள் தங்கள் சொத்து விபரங்களை தாக்கல் செய்தால் மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படும்’ என்று, தமிழக அரசு அறிவித்துள்ளதே?

அப்படியே, அவர்களது பார்வைக்கு வரும் கோப்புகளை சரி பார்த்து, கையெழுத்திட எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்கின்றனர் என, மாதந்தோறும் தகவல் சமர்ப்பிக்கவும் உத்தரவிட வேண்டும்.

வதிலை. ம.அன்புச்செல்வன், தேனி:

தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காமல், யார் என்றே தெரியாத நவநீதம் பிள்ளைக்கு வழங்கி விட்டனர் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் புலம்பி தள்ளியிருக்கிறாரே?

கடந்த ஆண்டே, வெனிசுலா நாட்டின் மரியா கொரினா மச்சாடோ என்ற பெண் அரசியல் தலைவருக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசைத் தட்டிப் பறிக்க முயன்றார் டிரம்ப். மச்சாடோ இதைப் பார்த்து, தன் தாராள குணத்தால், டிரம்ப்புக்கு நோபல் பரிசை அன்பளிப்பாக வழங்கி விட்டார். இந்தாண்டு டிரம்ப், இப்படி ஒரு பொறாமைக் கூத்தை அரங்கேற்றி இருக்கிறார்!

சு.வெண்ணிலா, மதுரை:

‘ஐந்து முதல்வர்களுடன் பணியாற்றியுள்ளேன். தமிழகத்திற்கு அனைத்தையும் தருவேன்’ என்று, மோடி பெருமிதம்?

அவரது பெருமிதத்தை, தமிழகத்திற்கு பயனுள்ளதாக மாற்றுவது இனி தமிழக முதல்வர் விஜய் கையில் தான் உள்ளது; செய்வாரா என பார்க்கலாம்.

ந.கண்ணா, நெல்லை:

‘நாம் பேசக்கூடாது நம் செயல்கள் தான் பேச வேண்டும்’ என்று அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறி இருப்பதன் அர்த்தம் என்ன?

கட்சியினர் அனைவரையும், ‘கம்முனு கிட’ என கூறுவதன் அர்த்தம்.

க.தன்யா, மும்பை:

ராகுல், ஜனாதிபதியின் மாண்பு குறித்து தெரியாமல், அரசியல் வம்புக்கு இழுக்க தயாராகி விட்டாரே?

காங்கிரசை சேர்ந்த ராகுலுக்கு, தன் வரம்பு என்ன என்பதே இன்னும் புரியவில்லை. இதில் ஜனாதிபதியின் மாண்பு எப்படி தெரியும்? இதற்கும் மேலாக, அவர் நாட்டுக்கு எதிராகவும், பெரிய தலைவர்களுக்கு எதிராகவும் பேச, அவரை யாரோ துாண்டி விடுகின்றனரோ என்றும் யோசிக்கத் தோன்றுகிறது.

ஆர்.மஞ்சுளா, லண்டன், பிரிட்டன்:

டில்லி பாதுகாப்பு படையினர், ஹிட்லர் போல் நடந்து கொள்வதாக, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறி இருப்பது பற்றி?

இவர்கள் யாவரும் அமைதி போராட்டமா நடத்துகின்றனர்... காவல் துறையினரை தாக்குவதும், பொது சொத்தை சேதப்படுத்துவதும் என அராஜகம் தானே நடக்கிறது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us