தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/வீட்டு வசதி வாரியத்தில் வட்டி தள்ளுபடி திட்டம் அறிவிப்பு

வீட்டு வசதி வாரியத்தில் வட்டி தள்ளுபடி திட்டம் அறிவிப்பு

வீட்டு வசதி வாரியத்தில் வட்டி தள்ளுபடி திட்டம் அறிவிப்பு


UPDATED : நவ 12, 2026 10:24 PM

ADDED : நவ 12, 2026 10:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2026 10:24 PM ADDED : நவ 12, 2026 10:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழக வீட்டு வசதி வாரியத்தில், குடியிருப்பு ஒதுக்கீடு பெற்று, தவணை காலம் முடிந்தும் நிலுவைத் தொகை செலுத்த தவறியவர்கள் பயன்பெறும் வகையில், வட்டி தள்ளுபடி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டு வசதி வாரியத்தில், தவணை முறை திட்டத்தின் கீழ், மனை, வீடு, அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடு பெற்று, தவணை காலம் முடிந்த பின்பும், விற்பனை பத்திரம் பெறாமல், 6,496 பேர் உள்ளனர். அவர்களுக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படும் என, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கடந்த மார்ச், 31ம் தேதி, தவணை காலம் முடிந்த திட்டங்களில், நிலுவைத்தொகை செலுத்த தவறியவர்கள் பயன்பெறும் வகையில், சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலுவை தொகையை, ஒரே தவணையாக செலுத்துவோருக்கு, அபராத வட்டி மற்றும் வட்டி தள்ளுபடி; நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்தில் வசூலிக்கப்படும் தொகைக்கான வட்டியில், ஒவ்வொரு ஆண்டிற்கும் ஐந்து மாதத்திற்கான வட்டி தள்ளுபடி வழங்கப்படும். இத்திட்டம் ஓராண்டு காலம் அமலில் இருக்கும்.

இத்திட்டத்தால் வாரியத்திற்கு, 92.39 கோடி ரூபாய் வருவாய் கிடைப்பதுடன், சிறப்பு வட்டி சலுகை வழியே, ஒதுக்கீட்டாளர்களுக்கு 18.45 கோடி ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us