தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/வீட்டுவசதி துறை செயலர் மீண்டும் மாற்றம்

வீட்டுவசதி துறை செயலர் மீண்டும் மாற்றம்

வீட்டுவசதி துறை செயலர் மீண்டும் மாற்றம்


ADDED : பிப் 29, 2024 02:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 29, 2024 02:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:வீட்டு வசதித்துறை செயலர் சமயமூர்த்தி, நான்கு மாதங்களில் மீண்டும் மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக மேலாண் இயக்குனர் காகர்லா உஷா, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துறை செயலராக இருந்த சமயமூர்த்தி, சுற்றுலாத்துறை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்,தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குனராகவும் செயல்படுவார்.

சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலர் டாரஸ் அகமதிடம், தமிழ்நாடு வக்பு வாரிய தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பு கூடுதலாக ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

இதற்கான அரசாணையை, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ளார்.

அடுத்தடுத்து மாற்றம்

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமான சி.எம்.டி.ஏ.,வில், அடுக்குமாடி திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான கோப்புகளை பைசல் செய்வதில், கடந்த ஆண்டு அக்டோபரில் தேக்க நிலை ஏற்பட்டது.

இதனால் ஏற்பட்ட மோதலால், அப்போது வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை செயலராக இருந்த அபூர்வா அக்., 18ல் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக, சி.சமயமூர்த்தி நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், அரசு செயலர் சமயமூர்த்தி நேற்று மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக கார்கர்லா உஷா நியமிக்கப்பட்டு உள்ளார். நான்கு மாதங்களுக்குள், வீட்டுவசதி துறை செயலர்கள் அடுத்தடுத்து மாற்றப்பட்டுள்ளது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us