sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 23, 2026 ,பங்குனி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

எந்தெந்த கட்சிக்கு எத்தனை தொகுதி; இபிஎஸ் உடன் பியூஷ் கோயல் ஆலோசனை

/

எந்தெந்த கட்சிக்கு எத்தனை தொகுதி; இபிஎஸ் உடன் பியூஷ் கோயல் ஆலோசனை

எந்தெந்த கட்சிக்கு எத்தனை தொகுதி; இபிஎஸ் உடன் பியூஷ் கோயல் ஆலோசனை

எந்தெந்த கட்சிக்கு எத்தனை தொகுதி; இபிஎஸ் உடன் பியூஷ் கோயல் ஆலோசனை

9


UPDATED : மார் 23, 2026 02:33 PM

ADDED : மார் 23, 2026 12:29 PM

Google News

9

UPDATED : மார் 23, 2026 02:33 PM ADDED : மார் 23, 2026 12:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தொகுதிப்பங்கீடு தொடர்பாக கூட்டணிக்கட்சித் தலைவர்களுக்கு தமிழக பாஜ மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் ஆலோசனை நடத்தினார்.

அ.தி.மு.க., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில், பா.ஜ., - பா.ம.க., - அ.ம.மு.க., - த.மா.கா., - புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புரட்சி பாரதம் போன்ற கட்சிகள் இடம் பெற்றுள்ளன. தொகுதி பங்கீடு இன்று இறுதி செய்யப்பட உள்ளது. இதற்காக, இன்று சென்னை வந்த தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் தொகுதிப்பங்கீடு தொடர்பாக கூட்டணிக்கட்சித் தலைவர்களுக்கு தமிழக பாஜ மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் ஆலோசனை நடத்தினார். அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், ஜிகே வாசன், ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர், ஜான் பாண்டியன்ஆகியோர் கலந்து கொண்டனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் பெற்ற தொகுதிகளை விட, கூடுதலாக பெறுவதில் தமிழக பாஜ தீவிரம் காட்டி வருகிறது.

நல்ல பதில் வரும்!

ஆலோசனையில் பங்கேற்ற பிறகு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது: தொகுதி எண்ணிக்கை குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் கூறினேன். தொகுதிகள் குறித்து விரிவாக பேசினேன். விரைவில் நல்ல பதில் வரும். நல்ல முடிவை பியூஷ் கோயல் எடுப்பார் என்று நம்புகிறேன், என்றார்.






      Dinamalar
      Follow us