தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ இபிஎஸ் சொத்து மதிப்பு எவ்வளவு

இபிஎஸ் சொத்து மதிப்பு எவ்வளவு

இபிஎஸ் சொத்து மதிப்பு எவ்வளவு


ADDED : ஏப் 06, 2026 10:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2026 10:13 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: இபிஎஸின் அசையும் சொத்தின் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். அவரிடம் விவசாய நிலம் ஏதும் இல்லை.

எடப்பாடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ், அத்துடன் இணைத்துள்ள பிரமாண பத்திரத்தில் சொத்து குறித்த விவரங்களை குறிப்பிட்டுள்ளார்.

அதில் தனது தொழில் விவசாயம் என இபிஎஸ் குறிப்பிட்டுள்ளார். இபிஎஸ் யாருக்கும் கடன் கொடுக்கவில்லை. மனைவி ராதா, பாலாஜி புளூமெட்டல் நிறுவனத்திற்கு ரூ.59.97 லட்சம் கடன் கொடுத்துள்ளார்.

இபிஎஸ்-டம் ரூ.11.25 லட்சம் மதிப்புள்ள 100 கிராம் தங்க நகை உள்ளது. மனைவி ராதாவிடம் 720 கிராம் தங்க நகை உள்ளது. இதன் மதிப்பு ரூ.81 லட்சம்இபிஎஸ்- ன் அசையும் சொத்தின் மதிப்பு ரூ.50.86 லட்சம். மனைவி ராதாவின் சொத்து மதிப்பு ரூ.2.16 கோடி ஆகும்.இபிஎஸ்க்கு விவசாய நிலம் மற்றும் விவசாயம் அல்லத பிற நிலம் ஏதும் இல்லைமனைவியின் பெயரில் சேலம் எடப்பாடியின் நெடுங்குளம் கிராமத்திலும், நாமக்கல் மாவட்டம் சின்னமணலி கிராமத்திலும், ஈரோடு மாவட்டம் நசியனூரிலும் மொத்தம் 8.3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.மேலும் அவருக்கு சேலம் சின்னமணலி கிராமத்தில் 4200 சதுர அடியில் விவசாயம் அல்லாத நிலம் உள்ளது.

சேலம் மாவட்டம் போடி நாயக்கன்பட்டியில் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.3.45 கோடி ஆகும்.இபிஎஸ், சேலம் மாவட்டம் வெள்ளக்கல்பட்டியை சேர்ந்த மூர்த்தி என்பவரிடம் ரூ.17 லட்சம் கடன் வாங்கி உள்ளார். சொந்தமாக வாகனங்கள் ஏதும் இல்லை.இபிஎஸ் மீது சேலத்தில் 3, திருச்சியில் 1 சென்னையில் 1 என மொத்தம் 5 வழக்குகள் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.0

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us