ரேஷன் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு எவ்வளவு? பரிந்துரைக்க அரசு குழு!
ரேஷன் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு எவ்வளவு? பரிந்துரைக்க அரசு குழு!
ADDED : டிச 25, 2025 05:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில் 35,000 ரேஷன் கடைகளை கூட்டுறவு சங்கங்கள் நடத்துகின்றன.
இந்த கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படி, 2021 பிப்ரவரியில் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தம், 2026 பிப்., 21ல் முடிவடைகிறது.
எனவே, புதிய ஊதிய விகிதங்களை பரிந்துரை செய்ய, கூட்டுறவு சங்கங்களின் நுகர்வோர் பணிக்கான கூடுதல் பதிவாளர் வீரப்பன் தலைமையில் 10 பேர் அடங்கிய குழுவை நியமித்து, தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.

