ஹூப்ளி - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் ஜூன் வரை நீட்டிப்பு
ஹூப்ளி - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் ஜூன் வரை நீட்டிப்பு
ADDED : டிச 20, 2024 12:24 AM
சென்னை:கர்நாடகா மாநிலம் ஹூப்ளி - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் சேவை, அடுத்த ஆண்டு ஜூன் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ஹூப்ளி - ராமேஸ்வரம் காலை, 6:50 மணி சிறப்பு ரயில், 2025 ஜனவரி, 4 முதல் ஜூன் 28 வரை நீட்டித்து இயக்கப்படுகிறது.
அதேபோல, ராமேஸ்வரம் - ஹூப்ளி இரவு 9:00 மணி சிறப்பு ரயில், ஜன., 5 முதல் ஜூன் 29 வரை நீட்டித்து இயக்கப்படும்.
இந்த ரயில்கள் இரு மார்க்கத்திலும் சிவகங்கை ரயில் நிலையத்திலும் நின்று செல்லும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மேல்மருவத்துாரில் வைகை ரயில் நிற்கும்
தைப்பூச திருவிழா, 2025 பிப்., 11ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, ஏராளமான பக்தர்கள், விரதம் இருந்து இருமுடி எடுத்துக் கொண்டு, மேல்மருவத்துாரில் உள்ள ஆதிபராசக்தி கோவிலுக்கு வருவர்.
எனவே, பக்தர்களின் வசதிக்காக, மேல்மருவத்துார் ரயில் நிலையத்தில், 48க்கும் மேற்பட்ட ரயில்களுக்கு, ஏற்கனவே தற்காலிக நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 'மதுரை - எழும்பூர் வைகை விரைவு ரயிலும், அடுத்த ஆண்டு பிப்., 11ம் தேதி வரை, இங்கு இரண்டு நிமிடங்கள் நின்று செல்லும்' என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ஆறு சிறப்பு ரயில்கள் ரத்து
தாம்பரம் - ராமநாதபுரம் உட்பட, ஆறு சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தாம்பரம் - ராமநாதபுரம் மாலை, 5:00 மணி சிறப்பு ரயில், வரும், 26, 28ம் தேதிகளிலும், ராமநாதபுரம் - தாம்பரம் காலை, 10:55 மணி ரயில், வரும், 27, 29ம் தேதிகளிலும் ரத்து செய்யப்படுகிறது
திருச்சி - தாம்பரம் அதிகாலை, 5:35 மணி சிறப்பு ரயில், வரும், 27, 28, 29, 31ம் தேதிகளிலும், தாம்பரம் - திருச்சி மாலை, 3:30 மணி ரயில், இதே நாட்களிலும் ரத்து செய்யப்படுகிறது
மங்களூரு - கொச்சுவேலி இரவு, 7:30 மணி சிறப்பு ரயில், வரும் 26, 28ம் தேதிகளிலும், கொச்சுவேலி - மங்களூரு மாலை, 6:40 மணி ரயில், வரும் 27, 29ம் தேதிகளிலும் ரத்து செய்யப்படுகிறது.