ADDED : ஜூலை 06, 2025 06:19 AM
மதுரை: மதுரை ரிங் ரோடு வண்டியூர் டோல்கேட் அருகே இன்று மாலை மனித நேய மக்கள் கட்சியின் மாநாடு நடப்பதை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
l ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் இருந்து செல்லும் பஸ்கள் பி.சி பெருங்காயம் சந்திப்பு, கருப்பாயூரணி, ஒத்த வீடு, ஆண்டார் கொட்டாரம், சக்கிமங்கலம், சிலைமான், விரகனுார் ரவுண்டானா வழியாக செல்ல வேண்டும்.
l தென்மாவட்டங்களில் இருந்து மதுரைக்கு வரும் பஸ்கள் விரகனுார் சந்திப்பிலிருந்து வைகை தென்கரை சாலை, குருவிக்காரன் சாலை பாலம் சந்திப்பு, அரவிந்த் கண் மருத்துவமனை சந்திப்பு, ஆவின் சந்திப்பு, கே.கே. நகர் ஆர்ச் சந்திப்பு வழியாக வர வேண்டும்.
சரக்கு வாகனங்கள்
l மேலுார் ரோட்டில் இருந்து வரும் அனைத்து சரக்கு வாகனங்களும் நான்கு வழிச்சாலை சந்திப்பில் இருந்து பூவந்தி, திருப்புவனம் வழியாக விரகனுார் சந்திப்பு, சிந்தாமணி ரோடு சந்திப்பு, மண்டேலா நகர் வழியாக திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லவேண்டும்.
l கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து மேலுார் வழியாக திருச்சி, சென்னை நோக்கி செல்லக்கூடிய சரக்கு வாகனங்கள்கப்பலுார் சந்திப்பில் இருந்து ரிங் ரோடு வழியாக தேனி ரோடு சந்திப்பு, சமயநல்லுார், வாடிப்பட்டி சந்திப்பு வழியாக திண்டுக்கல், மணப்பாறை வழியாக திருச்சி செல்லவேண்டும்.
பொதுமக்களின்கார், டூவீலர்கள்
l மாநாடு நடக்கும் நேரத்தில் பொதுமக்களின்இலகுரக வாகனங்கள் பி.சி பெருங்காயம் சந்திப்பில் இருந்து கருப்பாயூரணி, ஒத்த வீடு, ஆண்டார் கொட்டாரம், சக்கிமங்கலம், சிலைமான் வழியாக விரகனூர் ரவுண்டானா செல்ல வேண்டும்.
l விரகனுார் ரவுண்டானா சந்திப்பிலிருந்து பி.சி. பெருங்காயம் வழியாக மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட், மேலுார் ரோட்டிற்கு செல்லக்கூடிய பொதுமக்களின் வாகனங்கள் விரகனுார் ரவுண்டானா சந்திப்பில் இடது புறம் திரும்பி தென்கரை சாலை, குருவிக்காரன்சாலை, அரவிந்த் கண் மருத்துவமனை சந்திப்பு, ஆவின் சந்திப்பு, கே.கே. நகர் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.
மாநாட்டிற்கு வரக்கூடிய வாகனங்கள்
l திருமங்கலம் மார்க்கமாக மாநாட்டுக்கு வரக்கூடிய வாகனங்கள் கப்பலுார் பாலத்திலிருந்து வலதுபுறம் திரும்பி மண்டேலாநகர் ரிங்ரோடு, விரகனுார் ரவுண்டானா வழியாக செல்ல வேண்டும். உசிலம்பட்டி ரோடு மார்க்கமாக வரும் வாகனங்கள் நாகமலைபுதுக்கோட்டை ரிங்ரோட்டின் வலதுபுறம் திரும்பி கப்பலுார் பாலத்திலிருந்து இடதுபுறம் திரும்பி மண்டேலாநகர் ரிங்ரோடு மற்றும் விரகனுார் ரவுண்டானா வழியாக செல்ல வேண்டும்.
l கொட்டாம்பட்டி, மேலுார் ரோடு மார்க்கமாகவரும் வாகனங்கள் ஒத்தக்கடை, ரிங்ரோடு, பி.சி பெருங்காயம் சந்திப்பு வழியாக வரவேண்டும். திண்டுக்கல், வாடிப்பட்டி சாலை மார்க்கமாக வரும் வாகனங்கள் சமயநல்லுார், துவரிமான் சுற்றுச்சாலை வழியாக கப்பலுார் பாலம் சென்று, இடதுபுறம் திரும்பி மண்டேலாநகர் ரிங்ரோடு,விரகனுார் ரவுண்டானாவழியாக செல்ல வேண்டும்.

