ADDED : நவ 14, 2025 11:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓட்டளிக்கும் தகுதி கொண்ட அனைவரது பெயரும், வாக்காளர் பட்டியலில் இடம் பெற வேண்டும் என்பதற்காக, எஸ்.ஐ.ஆர்., எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை தேர்தல் கமிஷன் நடத்துகிறது. எஸ்.ஐ.ஆரை எதிர்த்து வரும் 16ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக, த.வெ.க., தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
இது வேண்டாத வேலை. பி.எல்.ஓ.,க்கள் வீடு வீடாக சென்று படிவங்களை கொடுக்கும்போதும், திரும்பப் பெறும்போதும், அரசியல் கட்சிகளின் ஓட்டுச் சாவடி முகவர்கள் உடன் இருக்கப் போகின்றனர்; த.வெ.க.,வினரும் இருப்பர். எஸ்.ஐ.ஆர்., குறித்த விபரங்கள் அடங்கிய 'வாக்காளர் வலிமை' என்ற புத்தகத்தை, தம்பி விஜய்க்கு அனுப்ப இருக்கிறேன். அரசியலுக்காக, எஸ்.ஐ.ஆரை தி.மு.க., எதிர்க்கிறது. த.வெ.க., போன்ற புதிய கட்சிகளுக்கு, எஸ்.ஐ.ஆர்., உதவியாக இருக்கும். -தமிழிசை, முன்னாள் கவர்னர்

