ADDED : டிச 28, 2025 03:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து மக்கள் உயிரிழந்த போது முதல்வர் அங்கு செல்லவில்லை. தேர்தல் நெருங்குவதால், கள்ளக் குறிச்சி சென்றுள்ளார்.
உண்மையிலேயே, தி.மு.க.,வை எதிர்ப்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தே.ஜ., கூட்டணிக்கு ஓட்டளிக்க வேண்டும். தனிப்பட்ட யாருடைய பெயரையும் சொல்ல விரும்பவில்லை. ஆனால், அந்நபர் தே.ஜ., கூட்டணிக்கு வருவார் என நாங்கள் நம்பவும் இல்லை; அவருக்காக தவம் கிடக்கவும் இல்லை.
யாரோ ஒரு அவதார புருஷர், திடீரென வானில் இருந்து வந்து தே.ஜ., கூட்டணியை காப்பாற்றுவார் எனவும் எதிர்பார்க்கவில்லை.
- ராம.சீனிவாசன், பொதுச்செயலர், தமிழக பா.ஜ.,

