sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'உள்துறை அமைச்சர் ஆகவில்லை உங்களோடு தான் இருக்கிறேன்!'

/

'உள்துறை அமைச்சர் ஆகவில்லை உங்களோடு தான் இருக்கிறேன்!'

'உள்துறை அமைச்சர் ஆகவில்லை உங்களோடு தான் இருக்கிறேன்!'

'உள்துறை அமைச்சர் ஆகவில்லை உங்களோடு தான் இருக்கிறேன்!'


ADDED : ஏப் 23, 2025 11:12 PM

Google News

ADDED : ஏப் 23, 2025 11:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:''நான் உள்துறை இணை அமைச்சர் ஆகவில்லை; உங்களோடு தான் இருக்கிறேன்,'' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி;

காஷ்மீரில் மிக துயரமான நிகழ்வு நடந்துள்ளது. அதற்கு நம்முடைய அரசு கொடுக்கும்; பதிலடி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என, சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். அரசும், அரசு இயந்திரங்களும் தகுந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யும்.

காஷ்மீர் செல்பவர்கள் செல்ல வேண்டும். இந்த விவகாரத்தில், அரசியல் பேசுபவர்கள் பேசிக்கொண்டு தான் இருப்பர். பிரதமராக மோடி மூன்றாவது முறை பதவியேற்ற அன்றும். பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள், இந்தியாவின் அமைதியை சீர்குலைக்க வேண்டும் என, தொடர்ந்து தாக்குதல் நடத்துகின்றனர். மக்கள் அனைவரும், இந்த நேரத்தில் ஒற்றுமையாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டும். இந்த சம்பவத்துக்கு அரசு நிச்சயம் பதிலடி தரும். இதில் அரசியல் பேசுவதை தவிர்க்க வேண்டும்.

சுற்றுலா சென்றவர்களை வரிசையில் நிறுத்தி, முஸ்லிமா, ஹிந்துவா எனக் கேட்டு, அதன்பின், ஹிந்துக்களை மட்டும் பயங்கரவாதிகள் சுட்டதாக, பாதிக்கப்பட்டோர் பேட்டி கொடுத்துள்ளனர் ஆனால், தாக்குதலுக்கு பின், காயமடைந்தவர்களை காப்பாற்ற முதலில் வந்தவர்கள் முஸ்லிம்கள்தான். அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நம் நாட்டில் இஸ்லாமியர்கள், ஹிந்துக்கள் அனைவரும் சமம் தான். ஆனால், பயங்கரவாதிகளின் மனநிலை அப்படி இல்லை. மதத்தின் அடிப்படையில் தான் அவர்கள் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகின்றனர். பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படைகளுக்கும் காலம் காலமாக சண்டை நடந்து வருகிறது. பாதுகாப்பு படையினர் தகுந்த பதிலடி தருகின்றனர். ஆனால், அப்பாவி மக்களை கொன்றுள்ளனர். பயங்கரவாதம் முற்றிலும் வேரறுக்கப்பட வேண்டும்.

இந்த விவகாரம் குறித்த தகவல்களை, மத்திய அரசு தெரிவிக்கும். நான் உள்துறை இணை அமைச்சர் ஆகப் போவதாக செய்தி பரப்புகின்றனர். இன்று வரை, உங்களோடு தான் நான் இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us