sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கருணாநிதியின் இறுதி காலத்தில் அளித்த வாக்குறுதிக்காக ஸ்டாலினுடன் இருக்கிறேன்: ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ 'ஓபன் டாக்'

/

கருணாநிதியின் இறுதி காலத்தில் அளித்த வாக்குறுதிக்காக ஸ்டாலினுடன் இருக்கிறேன்: ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ 'ஓபன் டாக்'

கருணாநிதியின் இறுதி காலத்தில் அளித்த வாக்குறுதிக்காக ஸ்டாலினுடன் இருக்கிறேன்: ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ 'ஓபன் டாக்'

கருணாநிதியின் இறுதி காலத்தில் அளித்த வாக்குறுதிக்காக ஸ்டாலினுடன் இருக்கிறேன்: ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ 'ஓபன் டாக்'

24


ADDED : மார் 18, 2026 07:18 AM

Google News

ADDED : மார் 18, 2026 07:18 AM

24


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இறுதி காலத்தில், அவருக்கு அளித்த வாக்குறுதிக்காக ஸ்டாலினுடன் இருப்பதாக, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார்.

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, ம.தி.மு.க., சார்பாக தேர்தல் அறிக்கையை, சென்னையில் நேற்று, வைகோ வெளியிட்டார். பின், அவர் அளித்த பேட்டி:

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இறுதி காலத்தில், அவரை சந்தித்தேன். அப்போது, அவரிடம், 'ஒரு காலத்தில் உங்களுக்கு பக்க பலமாக இருந்ததுபோல, என் வாழ்நாள் முழுதும், உங்கள் மகன் ஸ்டாலினுக்கு பக்க பலமாக இருப்பேன்' என்ற வாக்குறுதியை தந்தேன்.

அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், நான் செயல்படுகிறேன். தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்று, மீண்டும் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்பார். தேர்தலுக்கு பின், கூட்டணி அமைச்சரவைக்கு இடமில்லை. தி.மு.க., பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வைகோ வெளியிட்ட ம.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மது விலக்கு எங்கள் இலக்கு. இளைஞர்கள் வாழ்வை சீரழிப்பதாக, மதுப்பழக்கம் உள்ளது. 'கோகைன்' போன்ற போதை பொருட்களால் மாணவர்கள் வாழ்வு சீரழிகிறது. போதையால், பெண்களிடம், பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவதும், கொலை, கொள்ளை, பலாத்காரம் போன்ற கொடிய குற்றங்களில் ஈடுபடுவதும் அன்றாட நிகழ்வாகிறது.

இத்தகைய குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை, வாழ்நாள் முழுதும் சிறையில் அடைக்கும் வகையில், சிறப்புச் சட்டம் இயற்ற குரல் கொடுப்போம். 'லாக்கப்' மரணங்கள் தடுக்கப்பட வேண்டும்.

வெளிப்படைத்தன்மை, சொத்து பாதுகாப்பு, பக்தர்கள் நலன் ஆகியவற்றில், ஹிந்து சமய அறநிலையத் துறை கவனம் செலுத்தினால், கோவில்கள் எல்லாம் ஆன்மிகத்துடன், சமூக முன்னேற்ற மையங்களாகவும் வளர முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us