தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ராமதாஸ் இன்று அவசர ஆலோசனை

 ராமதாஸ் இன்று அவசர ஆலோசனை

 ராமதாஸ் இன்று அவசர ஆலோசனை


ADDED : மார் 18, 2026 07:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2026 07:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் இன்று நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

நடிகர் விஜயின் த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க, மறைமுகமாக ராமதாஸ் பேச்சு நடத்தி வந்தார்.

இதனிடையே, பா.ம.க., பெயர், கொடி, மாம்பழம் சின்னத்தை, அன்புமணி பயன்படுத்த தடை கோரி, சென்னை சிவில் நீதிமன்றத்தில், ராமதாஸ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை, வரும் மே 10ம் தேதி வரை விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்நிலையில், சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக, பா.ம.க., நிர்வாகக் குழு அவசர கூட்டத்தை, திண்டிவனம், தைலாபுரத்தில் இன்று ராமதாஸ் கூட்டியுள்ளார்.

தேர்தலில் போட்டியிடுவது குறித்த முக்கிய முடிவை, அவர் எடுக்கவிருப்பதாக, அவருடைய ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us