'தினகரனுக்கு என்ன வெறுப்பு என தெரியவில்லை': நாகேந்திரன்
'தினகரனுக்கு என்ன வெறுப்பு என தெரியவில்லை': நாகேந்திரன்
ADDED : அக் 12, 2025 01:29 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் உள்ள ஆண்டாள் கோவிலில், தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் நேற்று சாமி தரிசனம் செய்தார்.
பின்னர், அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்காக, தே.ஜ., கூட்டணி சார்பாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் செய்கிறார். பா.ஜ., தமிழக தலைவர் என்ற முறையில், இன்று மதுரையில் தேர்தல் பிரசார பயணத்தை துவக்குகிறேன். இதற்காக, ஆண்டாள் கோவிலில் தரி சனம் செய்தேன். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்.
அ.தி.மு.க., கூட்டணியில், த.வெ.க., வந்தால், பா.ஜ.,வை பழனிசாமி கழட்டி விடுவார் என அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் கூறுகிறார். அவருக்கு என்ன வெறுப்பு என தெரியவில்லை; சொந்த பிரச்னைக்காக கட்சியைப் பற்றி பேசுவது சரியாக இருக்காது.
சென்னையில், வழக்கறிஞர் ஒருவரை, வி.சி., தலைவர் திருமாவளவன் முன்னிலையில், அவரது கட்சியினர் தான் அடித்தனர். அதற்கும், எங்களுக்கும் சம்பந்தம் என சொல்வது எந்த விதத்தில் நியாயம்.
தமிழகத்தில், தி.மு.க., கூட்டணி வலுவாக இருப்பதாகவும், மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம் எனவும் ஆளுங்கட்சி தரப்பில் இருந்து வதந்தி பரப்புகின்றனர். ஆனால் ஆட்சி மாற்றம் நிச்சயம் வரும். தே.ஜ., கூட்டணி வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.