தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ எனக்கு 6 மொழிகள் தெரியும் ஆனாலும் மொழி திணிப்பு கூடாது

எனக்கு 6 மொழிகள் தெரியும் ஆனாலும் மொழி திணிப்பு கூடாது

எனக்கு 6 மொழிகள் தெரியும் ஆனாலும் மொழி திணிப்பு கூடாது


ADDED : ஆக 24, 2025 01:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 24, 2025 01:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:''கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டியது கட்டாயம்,'' என, நடிகர் கமல் பேசினார்.

தி.மு.க., மாணவர் அணி சார்பில், சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலக அரங்கில், 'எங்கள் கல்வி, எங்கள் உரிமை' என்ற தலைப்பில், மாநில கல்விக் கொள்கை உரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில், கமல் பேசியதாவது:

கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டியது கட்டாயம். மத்திய அரசு, கல்வியில் கூட்டாட்சி வழங்குவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஏனெனில், மாநில அரசுக்குதான் மக்களின் மனநிலையும், கள யதார்த்தமும் தெரியும்.

மொழி திணிப்பு கூடாது. மொழி என்பது மட்டுமே கல்வி கிடையாது. தமிழகத்தின் மாநில கல்விக் கொள்கை, தமிழ் மற்றும் ஆங்கிலம் என, இரு மொழி கொள்கையை தெளிவாக வலியுறுத்துகிறது.

தேசிய கல்விக் கொள்கையில், மும்மொழி கொள்கை, தாய் மொழி கல்வி, ஆங்கிலம் மற்றும் இன்னும் பிற இந்திய மொழிகள் என, குறிப்பிடப்படுகிறது. பிற மொழிகள் என்றால் என்ன.

நம் மாணவர்கள் இரு மொழிகளில் கற்று தேர்ந்தவர்கள். நடைமுறை தேவைக்கு ஏற்ப, மற்ற மொழிகளை கற்றுக் கொள்ளலாம். அதற்கு சிறந்த உதாரணம் நான்தான். நான் பள்ளிக்கு வெளியே இருந்து கூடுதலாக, 6 மொழிகளை கற்றுக் கொண்டேன்.

எனக்கு தேவைப்படும்போது, தேவையான மொழிகளை, நான் கற்றுக் கொண்டேன். ஆனால், என் தாய் மொழி தமிழ்தான்.

இன்றைய தொழில்நுட்ப உலகில், நிகழ்நேர மொழிபெயர்ப்பு சாதனங்கள் அதிகம் வந்து விட்டன. எனவே, மொழி திணிப்பு என்பது தேவையற்றது.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us