மகளை கவனிக்காமல் விட்டுவிட்டேன்: வேதனையைப் பகிர்ந்த இளையராஜா!
மகளை கவனிக்காமல் விட்டுவிட்டேன்: வேதனையைப் பகிர்ந்த இளையராஜா!
ADDED : ஜன 25, 2025 05:45 PM

சென்னை: பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி. இவரும் பின்னணி பாடகி. ஏராளமான பாடல்களை அவர் பாடி உள்ளார். இவர் 47 வயதில் கடந்த ஆண்டு ஜன.,25 ல் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதனையடுத்து இளையராஜா 'எக்ஸ்' சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில் அவர் கூறியதாவது: பவதாரணி எங்களை விட்டுப் பிரிந்த பின்புதான், எவ்வளவு அன்பு மயமாக இருந்திருக்கிறாள் என்பது எனக்குப் புரிந்தது; இன்று அவரது நினைவு நாள். கவனமெல்லாம் இசையிலேயே இருந்ததால் என் குழந்தைகளைக் கவனிக்காமல் விட்டுவிட்டேன்; இப்போது அது எனக்கு வேதனையைத் தருகிறது.பவதாரணியின் பிறந்த நாளன்று (பிப்., 12) நினைவுநாள் நிகழ்ச்சி நடத்தும் எண்ணம் உள்ளது. அதில் இசைக்கலைஞர்கள் பங்கேற்க கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த வீடியோவில் இளையராஜா கூறியுள்ளார்.