ஹிந்துவாக மட்டும் சென்றேன் அரசியல்வாதியாக செல்லவில்லை
ஹிந்துவாக மட்டும் சென்றேன் அரசியல்வாதியாக செல்லவில்லை
ADDED : பிப் 13, 2025 10:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் மலை பிரச்னை தொடர்பாக, கோர்ட் உத்தரவின்படி மதுரை பழங்காநத்தத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக என் மீது பி.என்.எஸ்., பிரிவு 35ன்படி போலீசார் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். அவர்களின் வினாக்களுக்கு விளக்கங்களை அனுப்புவதாக தெரிவித்துள்ளேன்.
இதுபோன்ற வழக்குகள் எதுவும் என் மீது நிலுவையில் இல்லை. பழங்காநத்தம் ஆர்ப்பாட்டத்திற்கு நான் அரசியல்வாதியாக வரவில்லை. ஒரு ஹிந்துவாக வந்தேன்.
மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் வரவேற்பு வளைவை அகற்றும்போது ஒருவர் மரணித்துள்ளார். ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார். தமிழகத்தில் எந்தப் பணிகளுமே சரியாக நடப்பதில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்.
எச்.ராஜா, மூத்த தலைவர், தமிழக பா.ஜ.,

