“சிறையில் நான் கொல்லப்படுவேன்”: சவுக்கு சங்கர் கோஷம்
“சிறையில் நான் கொல்லப்படுவேன்”: சவுக்கு சங்கர் கோஷம்
UPDATED : மே 14, 2024 03:22 AM
ADDED : மே 13, 2024 05:15 PM

கோவை: போலீசார் அழைத்து சென்ற போது, கோவை சிறையில் தான். நான் கொல்லப்படுவேன் என சவுக்கு சங்கர் கோஷம் எழுப்பினார்.
பெண் போலீஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து, யு யூடிப் சேனலில் அவதூறு கருத்துக்களை தெரிவித்த, சென்னையை சேர்ந்த சவுக்கு சங்கர், கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது, கஞ்சா கடத்தல் உட்பட மாநிலம் ழுழுவதும் மேலும் ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை சைபர் கிரைம் வழக்கில், அவரை ஐந்து நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு, கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து மாஜிஸ்திரேட் சரவணபாபு உத்தரவிட்டார். போலீசார் அழைத்து சென்ற போது, ''கோவை சிறை எஸ்.பி., எனது கையை உடைத்தார். எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. கோவை சிறையில் தான். நான் கொல்லப்படுவேன் என சவுக்கு சங்கர் கோஷம் எழுப்பினார்.