ADDED : ஜூன் 29, 2025 04:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி:
செம்மொழிக்கும் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம். தமிழ் செம்மொழியாக இருந்ததா அல்லது கருணாநிதி சொன்னதால் செம்மொழி ஆனதா?
கீழடியில் இரண்டு ஏக்கர் மட்டும் தோண்டி, மூடியது ஏன்? அதற்கு மேல் தோண்டினால், தமிழர்களின் தொன்மை தெரிந்துவிடுமா.
பா.ம.க.,வில் அன்புமணி, ராமதாசிற்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடு கட்சி பிரச்னை. அதை சரி செய்யணும். நானும், இருவரையும் சந்திப்பேன்.
பா.ஜ., - தி.மு.க.,வை ஒழிக்க வேண்டும் என்கிறது. தி.மு.க., - பா.ஜ.,வை வளர விடக்கூடாது என்கிறது. நான் இருவரையும் ஒழிப்பேன்; அதனால்தான் நீண்ட நாட்களாக, தனி ஆளாக நிற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

