sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தி.மு.க., ஆட்சியை அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன்: அண்ணாமலை சபதம்

/

தி.மு.க., ஆட்சியை அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன்: அண்ணாமலை சபதம்

தி.மு.க., ஆட்சியை அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன்: அண்ணாமலை சபதம்

தி.மு.க., ஆட்சியை அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன்: அண்ணாமலை சபதம்

158


UPDATED : டிச 26, 2024 10:32 PM

ADDED : டிச 26, 2024 04:24 PM

Google News

UPDATED : டிச 26, 2024 10:32 PM ADDED : டிச 26, 2024 04:24 PM

158


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: '' தி.மு.க., ஆட்சி அகற்றப்படும் வரை செருப்பு அணிய மாட்டேன், '' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கேள்வி


கோவையில் நிருபர்களை சந்தித்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியதாவது: நான் உண்மையாகவே அரசியல் செய்கிறோமா? அது மக்களுக்கு பயன்படுகிறதா என எனக்கு நானே கேள்வி கேட்கிறேன். சித்தாந்தம் சித்தாந்தம் என தொங்கிக் கொண்டு ஏதாவது ஒரு விஷயத்தை பேசிக் கொண்டு உள்ளோமா என என்னை நானே கேள்வி கேட்டுக் கொண்டு உள்ளேன். இன்று காலையில் இருந்து எனக்குநானே கேட்டுக் கொள்ளும் கேள்வி, நான் அரசியலில் தொடர வேண்டுமா என்ற கேள்வி.

தருணம்

தமிழகத்தில் பட்டப்பகலில் கவர்னர் மாளிகையில் இருந்து 1.5 கி.மீ., தொலைவில் அண்ணா பல்கலையில் ஒரு கட்டடத்திற்கு பின்னால், கொடூரமாக சித்ரவதை செய்து, எதற்கு பெண்ணாக பிறந்தோம் என நினைக்கும் அளவுக்கு ஒரு கொடூரமான செயல் சென்னையில் நடந்துள்ளது. அது வழக்கம் போல் அரசியல் ஆகி உள்ளது. பா.ஜ., வன்மையாக கண்டிக்கிறோம் என்று சொல்வதை விட எங்கள் அரசியல் பாதையை தீர்மானிக்கும் தருணமாக இதனை பார்க்கிறேன்

கட்சிப்பதவி


தமிழகத்தில் பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பாக இல்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையவில்லை. ஞானசேகரன் தி.மு.க.,வில் சைதாப்பேட்டையில் ஒரு வட்டப்பொறுப்பில் உள்ள ஆள் . ஏற்கனவே குற்றங்கள் உள்ள ஆள் தி.மு.க.,வில் இணைத்து கொண்டு முக்கிய நபர்களுடன் புகைப்படம் எடுக்கவும், சமூக வலைதளத்தில் பதிவிடவும் பதவி தேவைப்படுகிறது. அக்கட்சி பத்திரிகையிலும் அவரது பெயர் உள்ளது வந்துள்ளது.எங்களுடைய குற்றச்சாட்டு அவர் தி.மு.க.,வில் இருப்பது இல்லை. ஒரு குற்றவாளி இதேபோல் கொடூர செயலை செய்தவன், தி.மு.க.,வில் தன்னை இணைத்துக் கொண்டு, அமைச்சர் பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்து, அதனை உள்ளூர் போலீஸ் ஸ்டேசனில் நான் தி.மு.க.,க்காரன் எனக்காட்ட தேவைப்படுகிறது. ரவுடி ரிஜிஸ்டரில் தனது பெயர் வரக்கூடாது என்பதற்கும், அரசியல் அடையாளத்திற்கும் தேவைப்படுகிறது. அதை வைத்து மறுபடியும் ஒரு குற்றத்தை செய்துள்ளான். இதுதான் எங்களின் கோபம். அவன் தி.மு.க.,வில் இருக்கிறது கோபம் கிடையாது.

தி.மு.க., போர்வை


தி.மு.க., என்ற போர்வை குற்றம் செய்பவர்களுக்கு தேவைப்படுகிறது. தி.மு.க, என்ற போர்வை இருந்ததினால் மட்டும் தான் அந்த குற்றவாளி அந்த பெண் மீது கை வைத்துள்ளான். தி.மு.க., கட்சிப் பதவி இருக்கிறது. அமைச்சர் பக்கத்தில் இருக்கிறான் என்பதற்காக ஸ்டேசனில் விசாரணை நடத்தவில்லை. ஏற்கனவே இதேபோன்ற ஒரு குற்றத்தை செய்திருக்கிறான். அதே குற்றத்தை இரண்டாவது முறை செய்துள்ளான்.தி.மு.க., பொறுப்பில் இருந்ததால் அவனை சோதனை செய்யவில்லை. அதனால் அவன் தைரியமாக வெளியே வந்தான்.

ரத்தம் கொதிக்கிறது


எப்.ஐ.ஆர்., எப்படி வெளியானது. போலீஸ் துறையைத் தவிர வேறு யாரும் எப்ஐஆர்.,ஐ வெளியில் விட முடியாது. அது ஒரு எப்.ஐ. ஆரா. , படிக்காதவன் எழுதினால் கூட ஒழுக்கமாக எழுதுவான். அதை பார்க்கும் போது, குற்றம் செய்தது பெண்ணா? குற்றம் செய்தது அந்த அயோக்கியனா என சந்தேகம் எழுகிறது. அந்த பெண் குற்றம் செய்தது போல் எப்.ஐ.ஆர்., எழுதப்பட்டு உள்ளது. அதை படித்தால் ரத்தம் கொதிக்கிறது. காக்கிச்சட்டை அணிந்து இந்த எப்.ஐ.ஆர்., எழுதியவருக்கு வெட்கமாக இல்லையா ? இந்த எப்.ஐ.ஆர்., கோர்ட்டில் நிற்குமா?

மொபைல் எண் அப்பா பெயர், ஊர் பெயர் வெளியாகி உள்ளது. இதற்கு வெட்கப்பட வேண்டும். குடும்பத்தை நாசம் செய்துவிட்டீர்கள். ஏழு தலைமறைக்கு ஒரு கறுப்பு அடையாளம் கொடுத்துள்ளீர்கள். நீங்கள் எல்லாம் மனிதர்களா?

மரியாதை


மூன்று மாதம் தமிழகம் அமைதிப்பூங்காவாக இருந்தது. அண்ணாமலை திரும்பி வந்ததால், மறுபடியும் கலவரம் வெடித்தது என அமைச்சர் சொல்கிறார். இதற்கு வெட்கப்படணும். நீங்கள் எல்லாம் அமைச்சராக இருப்பதற்கு வெட்கப்படணும். கட்சிப் பதவியில் இருப்பதால் மரியாதையாக பேசிக் கொண்டு உள்ளேன். தேசிய கட்சியின் மாநில தலைவர் என்ற வெங்காய பொறுப்பில் இருக்கிறேன். அதனால் மரியாதையாக பேச வேண்டும் என சொல்லிக் கொடுத்ததால் மரியாதையாக பேசிக் கொண்டு இருக்கிறேன்.வீதிக்கு தனி மனிதனாக வந்தால் வேறு மாதிரி இருக்கும்.

வீடு முன்பு


கட்சி தலைவராக தொண்டராக நான் ஒரு சபதம் எடுத்துள்ளேன். எத்தனை ஆர்ப்பாட்டம் நடத்துவது. சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போனால், முன்னாள் கவர்னரை பிடித்து வைத்துள்ளனர். நாயை பிடிப்பது போல் பிடித்து வைத்துள்ளனர். எங்கள் வீட்டிற்கு தண்ணீர் வரவில்லை என ஆர்ப்பாட்டம் செய்கிறோமா? இனிமேல் ஆர்ப்பாட்டம் வேலையெல்லாம் இல்லை. ஒவ்வொரு வீட்டுக்கு வீ டு முன்பு போராட்டம் நடக்கும் வீட்டிற்கு வெளியே வந்து பா.ஜ., தொண்டன் போராட்டம் நடத்துவான்.

எனக்கு நானே சாட்டை அடி கொடுக்க கூடிய நிகழ்வை நாளை நடத்தப்போகிறேன். நாளை காலை 10 மணிக்கு 6 முறை சாட்டையால் அடித்து கொள்ளப்போகிறேன். தி.மு.க., ஆட்சியில் இருந்து அகற்றப்படும் வரை செருப்பு போட மாட்டேன். பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்ததும் செருப்பை கழற்றிவிடுவேன். 48 நாட்கள் விரதம் இருக்க போகிறேன் பிப்.,2வது வாரம் ஆறுபடை வீட்டிற்கு சென்று முருகனிடம் முறையிடப் போகிறேன்.

வேலை

சமூக வலைதளத்தில் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்கள். கேட்டால் கட்சி போர்வைக்குள் ஒழிந்து கொள்வீர்கள். நாளையில் இருந்து எனது அரசியலும் இப்படித்தான் இருக்கும். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலில் உங்களுக்கு எதற்கு மரியாதை கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணை அவமானப்படுத்த எப்.ஐ.ஆர்., வெளியில் விடப்பட்டு உள்ளது. அண்ணாமலைக்கு பொய் சொல்வது மட்டுமே வேலை என அமைச்சர் ரகுபதி சொல்கிறார். எனக்கு இதுதான் வேலையா?சிறைத்துறை கையில் வைத்துக்கொண்டு ஏதாவது ஒரு வேலையை செய்துள்ளீர்களா ? தப்பு நடந்தால், அதை வெளியில் கொண்டு மக்களிடம் கொண்டு வைப்பது எங்கள் வேலை. பதில் சொல்வது உங்கள் வேலை. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

பேட்டி முடிந்ததும், அண்ணாமலை செருப்பை கழற்றினார்.






      Dinamalar
      Follow us