ADDED : டிச 31, 2025 07:14 AM

சென்னை: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஒன்பது பேரை பணியிட மாற்றம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன் விபரம் :
பெயர் முந்தைய பணியிடம் தற்போதைய பணியிடம்
சத்யபிரத சாகு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை முதன்மை செயலர்
பழனிசாமி நில நிர்வாக ஆணையர் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலர்
கஜலட்சுமி போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் நில நிர்வாக ஆணையர்
கிரண் குராலா வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தின் ஆணையர் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர்
தேவ் ராஜ் தேவ் அறிவியல் நகரம், துணைத்தலைவர் தமிழக உப்பு நிறுவன மேலாண்மை இயக்குநர்
ஹர் சஹாய் மீனா ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சியின் ஆணையர் அறிவியல் நகரம், துணைத் தலைவர்
மலர்விழி நீர்வளத்துறையின் சிறப்பு செயலர் ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சியின் ஆணையர்
கோபால சுந்தர ராஜ் தமிழக அரசு பணியாளர் தேர்வாணைய செயலர் அண்ணா நிர்வாக பணியாளர் கல்லுாரி மற்றும் பயிற்சி துறை இயக்குநர்
பானோத் ம்ருகேந்தர் லால் கூட்டுவுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை துணை செயலர் தமிழக அரசு பணியாளர் தேர்வாணைய செயலர்
ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி உயர்வு: தமிழக காவல் துறையில் சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு, டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு அளித்து ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மாநில சைபர் குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மிட்டலுக்கு, டி.ஜி.பி.,யாக அதேபிரிவுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி., பாலா நாக தேவிக்கு டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு அளித்து, அதேபிரிவில், பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தெற்கு மண்டல ஐ.ஜி., பிரேம்ஆனந்த சின்ஹாவுக்கு கூடுதல் டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு அளித்து, ஆவடி போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்களுடன், 57 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உட்பட 70 போலீஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

