ஐஏஎஸ் அதிகாரிகள் அமுதா, மணிவாசனுக்கு கூடுதல் பொறுப்பு
ஐஏஎஸ் அதிகாரிகள் அமுதா, மணிவாசனுக்கு கூடுதல் பொறுப்பு
ADDED : ஆக 27, 2024 03:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ஐஏஎஸ் அதிகாரிகளான அமுதா, மணிவாசனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நீர்வளத்துறை செயலாளர் மணிவாசனுக்கு, நிர்வாக சீர்திருத்தம், ஊழல் கண்காணிப்பு ஆணையராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
வருவாய்த்துறை செயலாளராக உள்ள அமுதாவிற்கு, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையராக கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டது.

