ADDED : ஜன 29, 2024 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மீண்டும் ஏலத்தில் பீஹார் சட்டசபை. குதிரை பேரத்தில் பா.ஜ.,வும், அம்மாநில முதல்வர் நிதீஷ் குமாரும் இணைந்து செயல்பட்டுள்ளனர். ஓட்டளித்து தேர்வு செய்த மக்களை ஏல அரங்கில் காணவில்லை. பீஹாரில்நடக்கும் அரசியல் கூத்தை பார்க்கும்போது, கருத்தியல் ரீதியாக அங்கு மக்களைஅரசியல்படுத்தவில்லை என்ற உண்மைதெளிவாக தெரிகிறது.
தமிழகத்தில் மக்கள் விருப்பத்திற்கு எதிராக, அரசியல் நிகழ்வுகள் நடக்காமல் இருப்பதற்கு திராவிட இயக்கங்கள், கருத்தியல் சார்ந்த அரசியலை, பட்டி தொட்டியெல்லாம் கொண்டு சென்றுள்ளது தான் காரணம். அந்த வகையில் திராவிட இயக்கங்களின் கருத்தியல் சார்ந்த அரசியல் போற்றத்தக்கது.