ADDED : மே 20, 2025 06:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, கூடுதல் டி.ஜி.பி., கல்பனா நாயக் தலைமையில் செயல்படுகிறது.
இப்பிரிவில், ஒரு எஸ்.பி., இரண்டு கூடுதல் எஸ்.பி.,க்கள், நான்கு டி.எஸ்.பி.,க்கள் உட்பட, நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பணிபுரிந்து வருகின்றனர். இப்பிரிவுக்கு, சென்னை அசோக் நகரில் உள்ள போலீஸ் பயிற்சி கல்லுாரி வளாகத்தில், புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
இக்கட்டடத்தில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு செயல்பட துவங்கி உள்ளது. சில அதிகாரிகள் புதிய கட்டடத்திற்கு வந்து, பணிகளை துவக்கி உள்ளனர். ஓரிரு நாட்களில் முழு பிரிவும் செயல்பட துவங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.