sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'இதயம்' குழுமத் தலைவர் வி.ஆர். முத்து காலமானார்

/

'இதயம்' குழுமத் தலைவர் வி.ஆர். முத்து காலமானார்

'இதயம்' குழுமத் தலைவர் வி.ஆர். முத்து காலமானார்

'இதயம்' குழுமத் தலைவர் வி.ஆர். முத்து காலமானார்

2


UPDATED : மார் 04, 2026 08:40 PM

ADDED : மார் 04, 2026 06:13 PM

Google News

2

UPDATED : மார் 04, 2026 08:40 PM ADDED : மார் 04, 2026 06:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர்: விருதுநகரின் இதயம் குரூப் நிறுவனர் வி.ஆர்.முத்து, 73, உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று மதியம் 2:00 மணிக்கு காலமானார்.விருதுநகருக்கு நாளை மதியம் அவரது உடல் கொண்டு வரப்பட்டு, 3:30 மணிக்கு புது பஸ் ஸ்டாண்ட் அருகே மயானத்தில் அடக்கம் நடக்கிறது.இவர், விருதுநகர் மாவட்ட சிறு, குறு தொழில் சங்கத்தின் தலைவர், விருதுநகர் வியாபாரிகள் சங்க செயலர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தின் முன்னணித் தொழிலதிபர்களில் ஒருவரும், இதயம் குழுமத்தின் தலைவரும், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவருமான வி.ஆர். முத்து மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

பாஜவின் எச்.ராஜா வெளியிட்ட அறிக்கையில், இதயம் சமையல் எண்ணெய் நிறுவனத்தின் உரிமையாளர் இதயம் VR.முத்து காலமானார் என்கிற செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. பல்வேறு சமூக நலப்பணிகளை செய்து எளியவர்கள் பலருக்கு உதவிகள் செய்து மனிதாபிமானமிக்க மனிதராக வாழ்ந்தவர். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி எனத் தெரிவித்துள்ளார்.

திமுக எம்பி கனிமொழி வெளியிட்ட அறிக்கையில், வி.ஆர். முத்து மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் எனக்கூறியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us