நடிகர் விஜய் வந்தால் ஓரத்தில் நின்று பார்ப்பேன்: ராஜேந்திர பாலாஜி
நடிகர் விஜய் வந்தால் ஓரத்தில் நின்று பார்ப்பேன்: ராஜேந்திர பாலாஜி
ADDED : ஏப் 28, 2025 05:36 AM

விஜய் செல்வாக்கு மிக்க நடிகர் என்பதால், அவரைப் பார்க்க அனைவரும் வருவது இயல்பு. விஜய் சிவகாசி வந்தால், நான் கூட ஓரமாக நின்று ஆர்வமாகத்தான் பார்ப்பேன். கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது. நடிகருக்கு வரும் கூட்டம், ஓட்டாக மாறுவது எம்.ஜி.ஆர்., உடன் முடிந்துவிட்டது.
எம்.ஜி.ஆர்., அரசியலுக்கு வந்து, 20 ஆண்டுகள் மக்கள் பணியாற்றி, ரசிகர்களை பொதுத்தொண்டில் ஈடுபட வைத்து, அவர்களையும் அரசியலுக்கு கொண்டு வந்து, அதன்பின் கட்சி துவங்கியதால் தான் தேர்தலில் வெற்றி பெற்றார்.
அவரைப்போல் ஆகலாம் என நடிகர் விஜய் உள்ளிட்ட பலரும் நினைக்கின்றனர்; அது தவறு. விஜய் உள்ளிட்ட தி.மு.க.,வை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும், அ.தி.மு.க.,வின் தலைமையை ஏற்று, கூட்டணிக்கு வரலாம்.
இதை தான் கட்சியினர் அனைவரும் சொல்லி வருகிறோம். எங்களுடைய ஒரே இலக்கு, வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்துவது தான்.
- ராஜேந்திர பாலாஜி,
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்