தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ அ.தி.மு.க., வெற்றி பெற்றால் ஆர்.எஸ்.எஸ்., தான் ஆளும் சொல்கிறார் திருமாவளவன்

 அ.தி.மு.க., வெற்றி பெற்றால் ஆர்.எஸ்.எஸ்., தான் ஆளும் சொல்கிறார் திருமாவளவன்

 அ.தி.மு.க., வெற்றி பெற்றால் ஆர்.எஸ்.எஸ்., தான் ஆளும் சொல்கிறார் திருமாவளவன்


ADDED : பிப் 22, 2026 05:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2026 05:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அவனியாபுரம்: ''அ.தி.மு.க., வெற்றி பெற்றால் ஆர்.எஸ்.எஸ்., தான் ஆளும்,'' என, மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: பா.ஜ., பிடிக்குள் அ.தி.மு.க., போய் விட்டது. அ.தி.மு.க., வெற்றி பெற்றால் ஆர்.எஸ்.எஸ்., தான் ஆளும். திருவள்ளுவருக்கு காவி பூசக்கூடிய வேலையை துணிச்சலாக முன்னாள் முதல்வர் பழனிசாமி பதிவு செய்யக்கூடிய அளவிற்கு நிலைமை மாறி இருப்பது வேதனை அளிக்கிறது. அ.தி.மு.க., தலைவர்கள் கவனமாக, எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். இல்லையேல் அவர்கள் சுய அடையாளத்தை இழக்க நேரும்.

தி.மு.க., குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி எங்களுக்கான தொகுதிகளை கேட்டு பெறுவோம். நல்லிணக்கமான முறையில் இந்த பேச்சுவார்த்தை அமையும். தே.மு.தி.க., தி.மு.க., கூட்டணியில் இணைந்து இருப்பதை வரவேற்கிறோம். தி.மு.க., கூட்டணியில் காங்., தொடரும்.

அதிகார பகிர்வு மூலம் தான் கட்சி வளர்ச்சி அடையும். அதனால் தான் அதை நாங்கள் உயர்த்தி பிடிக்கிறோம் என்பது இன்றைய அரசியல் சூழலுக்கு உகந்ததாக இல்லை. வெற்றி பெற்ற பிறகு அதிகார பகிர்வை கூறலாம். அப்போது வாதிடலாம். ஆனால் வெற்றிக்கு குந்தகம் விளைவிக்கும் எந்தவித முயற்சியும் செய்யக்கூடாது என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us