ADDED : ஜூலை 28, 2025 04:11 AM
பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியதாவது:
பன்னீர்செல்வத்தை பா.ஜ., திட்டமிட்டு புறக்கணிக்கிறது. தன்னை ஒரு பொருட்டாக மதிக்காத பா.ஜ., கூட்டணியில் இருந்து பன்னீர்செல்வம் வெளியேற வேண்டும்.
இதை, அவர் ஒரு வரப்பிரசாதமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், பா.ஜ.,வை வளர்க்கும் எந்த கூட்டணியாலும் தமிழகத்துக்கு நன்மை கிடையாது.
பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, ஒரு ஆபத்தான கூட்டணி. அந்த கூட்டணியால், பன்னீர்செல்வத்துக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை.
'மதியாதார் வாசலை மிதிக்க மாட்டேன்' என கும்பிடு போட்டு வெளியே வருவதே அவருக்கு நல்லது; நிம்மதியும் கூட. விஜய் உடன் பன்னீர்செல்வம் சேர்ந்தால், தென் மாவட்டங்களில் அதுவே பலமாக இருக்கும்; இருவரும் வெற்றிகரமாக அரசியல் நடத்த முடியும்.
தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றால், அடுத்த இடத்திற்கு விஜய் - பன்னீர் கூட்டணி வர வாய்ப்புள்ளது. அதற்கும் கீழே அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி செல்லக் கூடும்.
இவ்வாறு அவர் கூறினார்.